Thursday, 2 August 2018













அயல் மண்ணில் தமிழ்ச் சேவைக்காகத் தமிழ் மண்ணில் பாராட்டு விழா.

28.07.2017 மாலை
குரு வணிக வளாக அரங்கம், சென்னை

"கனடா உதயன்"வார இதழின் பிரதம ஆசியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்கள் சீரிய தமிழ்ப் பணியும் சமூக சேவையும் ஆற்றி வருபவர். புலம் பெயர் மக்களின் வலியும் துயரமும் உணர்ந்து செயலாற்றுபவர்.

கனடாவில் தமிழ் இலக்கியம், கலைகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளை ஊக்குவித்து நடத்தி வருபவர். தமிழ்நாட்டில் பல சிற்றிதழ்களுக்குப் புரவலராக ஆதரவு தருபவர்.

அவருக்குச்  சிறப்பானதொரு பாராட்டு விழா.  மேன்மை சஞ்சிகை ஆசிரியர் மு. மணி தலைமையில், நந்தவனம்சந்திரசேரன் முன்னிலையில்,
கவிஞர் மணிஎழிலன்
வரவேற்புரையுடன் விழாத் தொடக்கம்.

விழா நாயகரே எதிர்பாராத விதத்தில்
கவிஞர் பாட்டழகன்,
கவிஞர் பத்மாவதி, கவிஞர் திலகவதி ,
பத்திரிகையாளர்கள் தச்சன்,நாகராசன், பூபதி, செளந்தர்ராஜன்,
பிரகாஷ் ஆகியோரும் சிறு தொழிலதிபர்களும் கலந்து கொண்டது சிறப்பு.

கவிஞர் தாமரைப் பூவண்ணன் , கவிஞர் பா.தென்றல் , எழுத்தாளர் வித்யா, உலகத் தமிழ் மன்றம் திருச்சி வே.த.யோகநாதன், கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன், வ.மு சே. திருவள்ளுவர், லிம்ரா சாதிக் பாட்சா ஆகியோரின் தொடர் வாழ்த்துரைகள்.

திரு. லோகேந்திரலிங்கம் அவர்களின் நெகிழ்ச்சியான ஏற்புரை. பார்வையாளர்களின் ஆர்வத்தையும் திறன்களையும் பாராட்டி மகிழ்ந்தார். தான் செவ்வனே ஆற்றி வரும் பணிகள் பற்றிச் சிறு விளக்கம். புலம்பெயர் தமிழர்களின் நிலை, பணிகள், பொறுப்புகள் மற்றும் பல விடயங்களும் நெகிழ்ச்சியுடன் பகிர்வு.

 திரு கிருஸ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளையும் கேள்வி நேரத்தையும் மிகச் சிறப்பாக நந்தவனம் சந்திரசேகரன் ஒருங்கிணைத்தார்.