பிறந்தநாள் பரிசாகச் சான்றோரின் ஆசிகள்.
"குறள் முழக்கம்" மார்ச்சு மாத இதழாக வாசல் பள்ளிக்கென்றே தனித்த, சிறப்பிதழாக வெளியிடப்பட்டது நனிமகிழ்வு .
10.03.2023
அச்சு ஊடகங்களைப் படித்துப் பழக்கப்பட்டதால் மின்னிதழ்கள் பக்கம் நான் விரும்பிச் சென்றதில்லை. திரு.மறைமலை இலக்குவனார் ஐயா அவர்கள் பெருந்தொற்றுக்காலத்தில் எனது பணிகள் குறித்துக் கேட்டபோது, மகளிர் சிறப்பிதழில் ஒரு கட்டுரையாக வரும் என நினைத்தேன். ஆனால் 9 பக்கங்களில்"வாசல் பள்ளித்" தனிச்சிறப்பிதழாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
தீவிரமாகக் கொரோனா பரவிக் கொண்டிருந்த நிலையில், முதல் கட்டத்தில், மாணவர்களின் கல்வி நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களின் வீடு தேடிச் சென்று கற்பித்தது, குறள் வழியிலான வாழ்க்கை என்பதை எனக்கு உணர்த்தி இருக்கும் படைப்பு இது.
பேரன்பும் நன்றியும் Maraimalai Ilakkuvanar ஐயா.







No comments:
Post a Comment