என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்...?
தினமும் நண்பல் 12 மணிக்கு என் வகுப்பறையில் தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் சில யோகாசனங்கள் செய்வோம். இவற்றை முறைப்படி கற்ற ஒருவரை ஒரு யோகாசன மையத்திலிருந்து அழைத்து வந்து, என் குழந்தைகளுக்கு மேற்சொன்னவற்றை எல்லாம் கற்பிக்கும் எண்ணம் நீண்ட காலமாகவே எனக்குள் இருந்து வந்தது.
இன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில், சாக்கோட்டை ஒன்றிய வட்டார வள மைய சிறப்பாசிரியர் திரு. அறிவழகன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்தார். மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் மூவருக்கு இந்திய அரசின் அடையாள அட்டைகள் வழங்கினார். அவர் தினமும் காலையில் யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவற்றைத் தவறாமல் செய்து வருபவர் என்று எனக்குத் தெரியும். எங்கோ இருக்கும் ஒருவர், நம் மாணவர்களுக்குப் பரிச்சயமில்லாதவர் வந்து பயிற்றுவிப்பதை விட, அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஆசிரியர் கற்றுத் தந்தால் நன்றாக இருக்குமே என நினத்தேன்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் இதைத்தானே நம் தாய்த்திரு நாட்டிற்காகக் கூறினார்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் இதைத்தானே நம் தாய்த்திரு நாட்டிற்காகக் கூறினார்.
”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்- ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ? ” என்று.இந்த வரிகள் நினைவில் வந்து ஓடியதும், அறிவழகன் ஐயா அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்; உடனே மிகவும் மகிழ்ச்சியோடு இசைவு தெரிவித்தார். மாணவர்களை வட்டத்தில் நிறுத்தி, பத்து ஆசனங்கள் சொல்லித் தந்தார். ஆர்வத்துடன் அனைவரும் செய்து பார்த்தனர். முகத்தில் மலர்ச்சியும் வகுப்பில் அமைதியும் ஒருங்கே நிலவின.வகுப்பு முடிந்ததும் குழந்தைகள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு, கை கொடுத்து த் தங்கள் சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.










No comments:
Post a Comment