Monday, 6 February 2017

ஆனந்தத்தின் எல்லை:
=====================

விழிகளில் கோவைப்பழம் பழுத்து
வீங்கின இமைகளிரண்டும் கனத்து
அங்கேயும் இங்கேயும் அலைந்தாலும் 
அழுதுகொண்டே இருக்கிறது காதல்.

மெல்ல அருகில் அழைத்து
மென்மையாய்த் தலை கோதி
கண்ணுக்குள் ஈரம் கசியக்
கனிவாய்க் காரணம் கேட்டேன்.

இருநூறுவருடம் ஆயுள்தா என்று
இருமடங்காய்க் கேட்டு நின்றது.
பேராசை உனக்குமா என்று
பேரதிர்ச்சி நம்ப மறுத்தது.

தெற்றுப்பல் காட்டியென்னை வீழ்த்தி
தென்றலாய் பதில் தந்தது.
அடுத்த நூற்றாண்டில் உன்னுடன்
அருந்ததியாய் வாழவேண்டும் என்று.                                                                   
                                                                                                                                                                                                                              
இங்கேயும் எங்கேயும் நகரவில்லை
இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறது
அதே காதல்.




No comments:

Post a Comment