Thursday, 23 February 2017

மக்களின் தீர்ப்புமாய்…
தரைதட்டிவிட்டது ஆணவக்கப்பல்
தலைநிமிர்கிறாள் தமிழ்த்தாய்.
பணநாயகச்சூது கவ்வியதை
ஜனநாயகம் வென்றுவிட்டது.
கூண்டுக்குள் அடைத்துவைத்தது-இன்று
கம்பிகளுக்குள் அடைபட்டுப்போகிறது.
தீர்ப்புகள் தாமதமாகலாம் – ஒரு
மரணத்தால் தடுமாறலாம் அன்றி
நீதிதேவதையின் கைத்தராசு
நீளவும் இல்லை; ஏறி இறங்கவும் இல்லை.
அவச்சொற்கள் நீங்கப் பெற்றோமென
ஆனந்தக் கூத்திடுவோமடா.
தன்மானக் கவச அணி கொள்வோம்.
தமிழனென்ற கர்வம் தலைக் கொள்வோம்

2 comments: